Pages

Friday, July 30, 2010

மனதை அதிரவைத்த காதல் கதை

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.

Monday, June 28, 2010

காடுதான் எங்களின் தாய்! - அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு




இந்தியா எங்கும் ஆதிவாசிகளின் அரசியல் எழுச்சிபற்றி தினசரிச் செய்திகள். அது குறித்துப் பெரும்பாலும் ஏளனமாகவும் எதிர்மறையாகவுமே ஊடகங்கள் சித்திரிக்கின்றன. 'அவதார்' படம் பார்த்துவிட்டுத் தங்களின் ஆதார உரிமைகளுக்காக அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் நேவிகளுக்காகக் கண்ணீர்விட்ட பொதுமக்கள் எவரும், உள்ளூர் ஆதிவாசிகள் பற்றியோ அவர்களின் முடிவுறாத போராட்டம் பற்றியோ கவனம்கொள்ளவில்லை.


நூற்றாண்டுகளாகவே ஆதிவாசிகள் என்ற வுடன் நம் மனதில் படிப்பறிவு இல்லாத, இலை தழைகளை உடையாக அணிந்து வேட்டையாடிப் பிழைக்கும் ஏளனத்துக்கு உரிய, ஒதுக்கப்பட்ட மனிதர்கள்பற்றிய பிம்பமே தங்கி இருக்கிறது. இன்றைக்கும் பள்ளிகளில் மாறுவேஷப் போட்டியில் ஆதிவாசியாகச் சிறுவர்கள் எளிதாக வேஷமிட்டு, கையில் ஈட்டியோடு குதிக்கிறார்கள். இதுதான் பெரும்பான்மை மக்களின் மனதில் உள்ள பிம்பம்.

பிஹலி, சக்மா, டங்கி, தொடியா, துந்தாரி கடிகாலி, கசாரியா. கோஷ்ரி, ஹல்பி, கோட்டா, ஹின்பி, லம்பானி, லாரியா, மாவிச்சி, மன்வாரி, சர்கோடி, தாகூகுரு, வர்லி, ஹாரோ, மரிங், மம்பா, சுலாங், தோடா, பூச்சோரி, சேமா, ஷெர்பா, கொண்டி, ஹதார், அசூரி, நிகோபாரிசி, வாஞ்சோ, நிமாரி... இதெல்லாம் என்னவென்று பார்க்கிறீர்களா?

-இவை அனைத்துமே இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆதிவாசிகள் பேசும் மொழிகள். இதன் பெயர்களைக்கூட நாம் கேள்விப்பட்டது இல்லை. இந்த மொழிகளைப்போல இன்னும் 100 ஆதிவாசிகளின் மொழிகள் உள்ளன. அதில் பெரும்பான்மை இன்று அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. காட்டில் இருந்து ஆதிவாசி துரத்தப்படும்போது முதலில் அழிக்கப்படுவது அவனது மொழியே. அதை காலனிய அதிகாரிகள் மிகக் கவனமாகச் செயல்பட்டு அழித்து ஒழித்தனர்.

2001-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வசிக்கும் ஆதிவாசிகளின் எண்ணிக்கை 84 மில்லியன். அதாவது, இந்திய மக்கள்தொகையில் 8.2 சதவிகிதம். 461 வகையான ஆதிவாசிகள் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நம்மோடுதான் சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற அடிப்படைப் பிரக்ஞையைக்கூட பொதுத் தளங்களில் காண முடியாது.







ஆதிவாசிகளை அவர்கள் இருப்பிடங்களில் இருந்து துரத்துவது உலகெங்கும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. முக்கியக் காரணம், அங்கு உள்ள இயற்கைவளங்களைத் தனிநபர்கள் சுரண்டல் செய்வதற்கு ஆதிவாசிகள் தடையாக உள்ளார்கள் என்பதே. அத்துடன் சுய லாபங்களுக்காக இயற்கையை அழிப்பதை ஆதிவாசிகள் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை. வனவாசிகளை நிழல் உருவங்கள்போல யதார்த்த உலகின் கண்களில் இருந்து இருட்டடிப்புச் செய்வதுடன், அவர்களின் ஆதாரப் பிரச்னைகளைப்பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படும்போது எல்லாம் வன்முறையால் அதை ஒடுக்கி, அவர்களை அடையாளம் அற்றுப்போகச் செய்வதே நடந்து வருகிறது.










நூற்றாண்டு காலமாக இயற்கையை நம்பி வாழ்ந்த ஆதிவாசிகள் ஏன் இன்று போராடுகிறார்கள். தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற அவர்களின் குரல்கூட வெளியே கேட்பது இல்லை என்பதுதான் அவர்களின் ஆதாரக் கோபம்.

ஆதிவாசிகளின் போராட்டம், தண்ணீரை, மரங்களை, கானுயிர்களைப் பாதுகாப்பதற்காகவும், இயற்கை வளங்களை அநியாயமாகக் கொள்ளையடிப்பதைத் தடுக்கவுமே துவங்கப்பட்டு இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இன்றும் அவர்களுக்கு முறையான கல்வி வசதியோ, மருத்துவ வசதியோ, அடிப்படை உரிமைகளோ செய்து தரவில்லை. இரண்டாம்பட்சக் குடிமக்களாகவே ஆதிவாசிகள் எல்லா மாநிலங்களிலும் நடத்தப்படுகிறார்கள்.

மலைப் பயணங்களுக்குச் செல்லும் மக்கள், ஆதிவாசிகளைக் காண்பதை ஒரு வேடிக்கையாகவே கருதுகிறார்கள். அவர்களை, அவர்களின் வசிப்பிடங்களை எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்வதில் காட்டும் அக்கறையை அவர்கள் வாழ்நிலை மீது ஒருபோதும் காட்டுவதே இல்லை.

அமெரிக்காவின் பூர்வகுடி இந்தியர்களின் தலைவனாக இருந்த சியாடில், இயற்கையை ஆக்கிரமித்துக்கொள்ள விரும்பிய அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிராகப் போராடினார். அந்தப் போராட்டத்தின்போது அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது. அவரது உரையில் மறக்க முடியாத சில பகுதிகள் உள்ளன.

'தூய்மையான காற்றை, பெருகியோடும் ஆற்றை, மலைகளின் மௌனத்தைப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் தெரியாத அதிகாரவர்க்கத்திடம் எப்படி இயற்கையை நாங்கள் ஒப்படைப்பது? அவர்கள் இயற்கையை விலைக்கு விற்கப்படும் பொருட்களைப்போலவே கருதுகிறார்கள். இயற்கை ஒரு வணிகப் பொருள் அல்ல; கானகத்தில் உள்ள அத்தனையும் இங்கு வாழ்பவர்களின் அடையாளங்கள்.

இங்கு உள்ள மரத்தை நீங்கள் வெறும் மரமாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் அதை எங்கள் மூதாதையர்களாகப் பார்க்கிறோம். இங்கு உள்ள ஒரு பாறை வெறும் பாறை இல்லை. அது எங்கள் தாயைப் புதைத்த இடம். இங்கு பூத்துள்ள பூக்கள் இறந்துபோன எங்கள் சகோதரிகளின் சிரிப்பு. காடுதான் எங்களின் வீடு. காடுதான் எங்களின் தாய் - தகப்பன். எங்களை நீங்கள் அதிகாரத்தின் துணைகொண்டு விரட்டி இதைக் கைப்பற்றவும்கூடும். ஆனால், இதன் புனிதத்தை நீங்கள் புரிந்துகொள்ளாமல் சிதைத்துவிடுவீர்கள் என்பதற்காகவே நாங்கள் போராட வேண்டியிருக்கிறது.

உங்களுக்கு நிலம், விலைக்கு விற்கப்படும் ஒரு பொருள். எங்களுக்கு அதுவே வாழ்க்கை. ஆகவே, உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான நிலத்தை நீங்கள் எங்களிடம் கேட்டால் நாங்கள் முன்வந்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், நீங்கள் உங்கள் வசதியைப் பெருக்கிக்கொள்ள நிலம் கேட்கிறீர்கள். இந்தக் காற்றில் எங்களின் பாட்டன் பூட்டன்களின் மூச்சுக் காற்று கலந்து இருக்கிறது. இதைவிட்டு எங்களை விரட்டினால் அவர்களோடு உள்ள அரூபமான தொடர்பு அற்றுப்போகும் என்பதை, ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்?

விதி வலியது என்று நாங்கள் நம்புகிறோம். அதுதான் உங்களை அனுப்பி எங்களோடு சமர் செய்கிறது. எங்களின் ரத்தம் இந்தப் பூமிக்குத் தேவைப்படுகிறது என்பதால், உங்களோடு போராட நாங்கள் முன் நிற்கிறோம். நாங்கள் இறந்துபோனாலும் எங்களின் அழியாத சொற்கள் உங்களை நட்சத்திரம்போல வானில் இருந்து பார்த்தபடியேதான் இருக்கும்!'

சியாட்டிலின் உரை நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிகழ்த்தப்பட்டு இருந்தபோதும் இன்றைய சூழலிலும் அப்படியே பொருத்தமாக இருக்கிறது. ஆதிவாசிகளைக் கேலிக்குரிய பிம்பமாக மாற்றியதில் ஹாலிவுட் சினிமாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இன்று வரை ஹாலிவுட்டில் வெளியாகும் பெரும்பான்மைப் படங்கள், ஆதிவாசிகளை எப்படி நாகரிகமான மனிதர்கள் ஒடுக்கி அவர்களை நல்வழிப்படுத்தினார்கள், புதையலை எடுத்தார்கள் என்பதையே விளக்குகிறது.

'அவதார்' படத்தில்கூட நேவிகளுக்காகப் போராட ஒரு வெள்ளைக்கார ஜாக் தேவைப்படுகிறான். இதன் ஒரு பகுதியாகவே டார்ஜான் கதைகளைக் காண வேண்டும். காட்டில் வளர்க்கப்படும் டார்ஜான் ஒரு வெள்ளைக்காரக் குழந்தையே. அவன்தான் காட்டினை வழி நடத்துகிறான். போராடுகிறான். ஆதிவாசிகள் இலக்கியம், சினிமா என எதுவும் இந்த 50 வருடங்களில் வளர்ச்சி அடையவே இல்லை.

இந்த ஆண்டு தேசிய விருது பெற்ற பட்டியலில் திரிபுரா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட YARWNG (Roots) என்ற படம் தேசிய விருது பெற்றது. அப்படி ஒரு படம் வெளியாகி உள்ளது என்ற தகவலைக்கூட ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. இந்தப் படம் நீர் மின்சக்தித் திட்டத்துக்காக ஆதிவாசிகள் தங்கள் மலைவாழ் வசிப்பிடத்தில் இருந்து இடம்பெயரவைக்கப்படும் பிரச்னையை முன்வைக்கிறது.

நாகாலாந்தில் தயாரிக்கப்பட்ட Tattooed Head Hunters என்ற ஆவணப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளது. ஆனால், இந்தப் படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வருவதற்கு இன்னும் 50 வருடங்களுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டியதுதான் நமது சூழலாக உள்ளது.

நர்மதா அணைக்கட்டுப் பிரச்னை, கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்றும் அதற்கான தீர்வு எட்டவில்லை. போராடும் நர்மதா மலைவாழ் மக்கள் நம்பிக்கை இழக்கவே இல்லை.

ஜீவன் சாலா என்ற ஓர் ஆவணப் படத்தைப் பார்த்தேன். அது நர்மதா அணைக்கட்டுப் பகுதியில் உள்ள ஆரம்பக் கல்விபற்றியது. நர்மதா அணை திட்டப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் பள்ளிகளே இல்லை. ஒரேயரு பள்ளி செயல்படுகிறது. ஆனால், அங்கே ஆசிரியர்கள் வருவது இல்லை. ஆகவே, நர்மதா அணைக்கட்டுப் போராட்டத்துக்கு மேதா பட்கருடன் இணைந்து செயல்பட வந்த, பல துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், அறிஞர்கள் யாவரும் ஒன்றுகூடி மலைவாழ் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜீவன் சாலா பள்ளிகள்.

இந்தப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் ஊதியம் இல்லாத சேவை செய்கிறார்கள். அவர்கள் தங்கும் இடம், உணவை மலைவாழ் மக்களே கவனித்துக்கொள்கிறார்கள். பள்ளிக்குச் சிறிய கட்டடம் ஒன்றை மண்ணால் அவர்களே உருவாக்கித் தருகிறார்கள். மலைவாழ் மக்களுக்கான, தனித்த கல்வி புகட்டும் முறை மற்றும் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

சிறுவர்கள் மழையோடும் பனியோடும் பள்ளிக்கு வந்து கற்றுக்கொள்கிறார்கள். ஆற்றில் வெள்ளம் வந்து பள்ளிக்கூடத்தை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. புதிய பள்ளிக்கூடம் கட்டும் வரை சிறார்கள் திறந்த வெளியில் படிக்கிறார்கள். அவர்கள் பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாக மூலிகைச் செடிகளை அடையாளம் காண்பது, கானுயிர்களுக்கு உதவுவதுபோன்றவை இடம்பெற்று இருக்கின்றன. பள்ளி, போராட்டங்களுக்கு நடுவே சிறப்பாக நடக்கிறது.

ஆனால், அவர்களுக்குத் தேர்வு நடத்தி, சான்றிதழ் தருவதற்கு அரசு மறுக்கிறது. அத்துடன் உடனடியாக இதுபோன்ற பள்ளிகள் நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆணையிடுகிறது. ஜீவன் சாலா நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். வழக்கு நடக்கிறது. படித்த மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல் காத்திருக்கிறார்கள். முடிவில் அரசுப் பள்ளியில் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அரசு, பரீட்சை முடிவுகளை அறிவிக்க மறுக்கிறது. மீண்டும் நீதிமன்றம் செல்கிறார்கள். படித்து பாஸ் செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஜீவன் சாலா பள்ளிகளை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய அளவில் அறிவுஜீவிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள் போராடி... இன்று அனுமதிபெற்று இருக்கிறார்கள். சம்பளம் வாங்கும் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர் யாரும் செல்ல முன் வராத மலைவாழ் கிராமங்களுக்கு, சம்பளம் இல்லாமல் வேலை செய்ய... அமெரிக்காவில் தான் பார்த்துவந்த வேலையைத்துறந்து விட்டுச் சில இளைஞர்கள் முன் வருகிறார்கள். இந்த மாற்றத்தை ஓர் ஆவணப் படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இது பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றுள்ளது.

'படித்தவர்கள் சூரியனைப் பார்த்துத் தலை நிமிர்ந்து நடப்பதில் பெருமைகொள்கிறார்கள். நாங்கள் பூமியைப் பார்த்துக் குனிந்து நடப்பவர்கள். பூமியுடன் பேசத் தெரிந்தவர்கள். பூமி எங்களுக்குக் கற்றுத் தருகிறது. பூமியைக் கண்களால் மட்டும் புரிந்துகொள்வது கடினம். நாங்களும் அப்படியானவர்களே' என்று செவ்விந்தியர்களின் முதுமொழி சொல்கிறது.

அது உலகெங்கும் உள்ள எல்லா ஆதிகுடிகளுக்கும் பொருந்தக்கூடியதே!







இன்னும் பரவும்...

Sunday, June 20, 2010

மார்ச்சுக்கே பூணூல்

கொஞ்சம் அசந்தால் மார்ச்சுக்கே பூணூல் போட்டு விடுவார்களோ!
Share

புறப்பட்டு விட்டார்கள் ஜாதி ஒழிப்புப் புரட்சியாளர்கள்!

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியும் சேர்க்கப்பட வேண்டும் என்று
சமூகநீதியாளர்கள் அனைவரும் ஒருமித்த முறையில் ஓங்கிக் குரல் கொடுத்து
வருகின்றனர்.

இன்னும் சொல்லப் போனால் ஜாதி ஒழிக என்று அழுத்தமாகக் குரல் கொடுப்போரும்,
ஜாதி ஒழிப்பினைக் கொள்கையாகக் கொண்டவர்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை
என்று தீவிரமாகப் பேசி வருகின்றனர்.

ஜாதியில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்களோ ஜாதியின் வாலினைத் தம் பெயரோடு
ஒட்ட வைத்துக் கொண்டு உலவுபவர்களோ கூடாது கூடாது ஜாதிவாரி கணக்கெடுப்புக்
கூடாது என்று ஒய்யாரம் பேசுகிறார்கள் ஒட்டாரமும் செய்கிறார்கள்.

ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தேவை என்கிற அவசியமான சூழல்
உள்ள ஒரு நாட்டில், அதுபற்றிய புள்ளி விவரம் தேவை என்பது அடிப்படையான
பொது அறிவாகும்.

டில்லியிலே சில பெரிய மனிதர்கள்கூடி ஓர் அமைப்பை
ஏற்படுத்தியிருக்கின்றனர். அந்த அமைப்பின் பெயர் மேரி ஜாதி ஹிந்துஸ்தானி
(Meri Jaati Hindustani)

இந்தியர்களே எங்கள் ஜாதி என்பது இதன் பொருள்.

இதில் முக்கியமாகப் புரவலராக இருப்பவர் மக்களவை முன்னாள் தலைவர் காம்ரேட்
சோம்நாத் சட்டர்ஜி.

ஒரு மந்தையில் பசுக்கள், எருதுகள் எருமைகளைப் பிரித்துக் கணக்கெடுப்பது
போல மனிதர்களுள் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுவதாகக்
கொச்சைப்படுத்திக் கருத்துகளைக் கூறியுள்ளனர்.

இருக்கும் ஜாதி உணர்வை குறைக்க வேண்டுமே தவிர அதனை வளர்த்துவிடக் கூடாது
என்பதாலேயே தான் இத்தகு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் பரந்த உள்ளம்
உள்ளவர்கள்போல பாசாங்கு செய்கிறார்கள்.

அரசியல், சமுதாயம் மற்றும் மதவாதிகள்கூட இந்த அமைப்புக்குத் தங்-களின்
ஆதரவினைத் தருவதாகக் கூறியுள்ளனர் என்று இந்த அமைப்பின் அமைப்பாளர்
பிரதாப் வைதிக் என்பவர் கூறியுள்ளார்.

(தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 12.6.2010 பக்கம் 7)

சமூக நீதிக்காக ஜாதிவாரி கணக்கெடுக்க முனையும்போது, ஜாதி ஒழிப்பு
வீரர்கள்போல குறுக்குச் சால் ஓட்டும் இந்தப் பெரிய மனிதர்கள் ஜாதி
ஒழிப்புக்காக இதுவரை எந்தத் துரும்பைக் கிள்ளிப் போட்டுள்ளனர் என்பதை
அறிவு நாணயத்தோடு அறிவித்தால் அதனை வரவேற்கலாம்.

இவர்கள் வீட்டுத் திருமணங்கள் ஜாதி மந்தைக்குள் பட்டிக்குள் (மாடுகளை
உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா!) அடங்குகின்றனவா அல்லது ஜாதி
வேலியைத் தாண்டி நடக்கின்றனவா என்பதை ஆதாரத்துடன் சொல்லட்டும்
அவர்களுக்கு ஒரு வணக்கம் கூடப் போடலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப்
பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று
குறைந்தபட்சம் அவர்களின் அமைப்பு சார்பாக ஒரே ஒரு குட்டித் தீர்மானம் போட
தங்கள் பேனா மூடியைத் திறப்பார்களா என்று திறந்த மனத்தோடு கேட்க
விரும்புகிறோம்.

இதில் ஒரு கடைந்தெடுத்த வேடிக்கை வினோதம் வயிறு குலுங்கச் சிரிக்க
வைக்கும் கோமாளித்தனம் என்ன தெரியுமா?

ஒரு மார்க்சியவாதியாக இருந்து கொண்டு தன் பெயருக்குப் பின்னால் காரசாரமாக
ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த சட்டர்ஜியை (சோம்நாத் சட்டர்ஜி) வெட்டிக்
கொள்ள முடியாதவர்தான், மனம் இல்லாதவர்தான் ஜாதிவாரி கணக்கெடுப்புக்
கூடாது என்ற அமைப்பின் புரவலர் ஆவார்.

சட்டர்ஜி என்பது பார்அட்லா பட்டமா? பிரம்மாவின் நெற்றியில் பிறந்ததாகத்
தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓர் உயர் ஜாதிக் கூட்டத்தின் ஆணவச் சின்னம்
அல்லவா அது!

இன்னும் ஓர் அணுகுண்டு இருக்கிறது அதைத் தூக்கிப் போட்டால் அசந்து போய்
விடுவீர்கள். அப்படியா! அது நடந்திருக்குமா? நம்ப முடியவில்லையே! என்று
பேசக்கூட ஆரம்பித்து விடுவீர்கள்.

மும்பையிலிருந்து வெளிவரும் எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி
என்னும் வாரப் பத்திரிகையில் (8.5.1993) வெளிவந்த அந்த வெடிகுண்டுத்
தகவல் இதோ:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோம்நாத்
சட்டர்ஜி எனும் வங்காளப் பார்ப்பனர் தனது பேரக் குழந்தைகளுக்குப் பூணூல்
கல்யாணம் நடத்தி இருக் கிறார்; அது மட்டுமல்ல; அதற்கு அழைப்பிதழ்
அச்சிட்டு அரசியல் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்!

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலகம்
முழுதுமிருந்தும் மார்க்சிய அறிஞர்களை அழைத்து மார்க்சியம்பற்றிச்
சர்வதேசக் கருத்தரங்கை கல்கத்தாவில் நடத்தியது; இந்தக் கருத்தரங்கில்
கலந்து கொள்ள மேற்கு வங்க இடதுசாரி ஆட்சியில் இடம் பெற்றுள்ள ஆர்.எஸ்.பி.
கட்சிக்கோ, பார்வர்டு பிளாக் கட்சிக்கோ அழைப்பு அனுப்பப்படவில்லை.

இவைகள் இடதுசாரி கட்சிகளாக இருந்தாலும்கூட, கட்சிப் பெயரில் மார்க்சைக்
கொண்டிருக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளர் சுர்ஜித்சிங் இதற்குக் காரணம் கூறினார்.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவந்த மார்க்சிய அறிஞர்களுக்கு
அளிக்கப்பட்ட விருந்துக்கும்கூட அக்கட்சிகளுக்கு அழைப்பு
அனுப்பப்படவில்லை. இது பற்றிப் பார்வர்டு பிளாக் கட்சி மூத்த நாடாளுமன்ற
உறுப்பினர் சிட்டாபாசு குறிப்பிடும்போது எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை;
மார்க்சிஸ்ட் வட்டாரத்திலிருந்து எனக்கு வந்த ஒரே அழைப்பு சோம்நாத்
சட்டர்ஜியிடமிருந்து தான். அந்த அழைப்பு அவர், தனது இரண்டு பேரப்
பிள்ளைகளுக்குப் பூணூல் கல்யாணம் நடப்பதற்கான அழைப்பு என்று
கூறியுள்ளார்.

பம்பாயிலிருந்து வெளிவரும் எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி வாரப்
பத்திரிகை (மே 8, 1993) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

‘‘Chitta Basu, however jocularly remarked, that the only invitation he
had received from CPI (M) quarters was from Somnath Chatterjee MP, in
connection with his two grandsons ‘thread’ Ceremony’’

_ என்று அந்த ஏடு எழுதியிருக்கிறது; இதுபற்றி அந்த ஏடு தனது கருத்துகளை
இவ்வாறு எழுதியிருக்கிறது.

சித்தபாசு சாதாரணமாகச் சொன்ன இந்தச் செய்தி, விருந்து கொடுத்த
கம்யூனிஸ்ட் கட்சியின் குணாம்சத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
இப்போதெல்லாம் கம்யூனிஸ்ட்கள் மதத்தையோ கடவுள் நம்பிக்கையையோ உறுதியாக
எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றுவதில்லை. ஆனாலும், பூணூல்
போடும் சடங்கு, மதத் தத்துவத்தைச் சார்ந்த பிரச்சினை அல்ல; அது மதச்
சடங்கு; வர்ணாஸ்ரமத்திலும், ஜாதியிலும் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்
சடங்கு.

இந்தச் சடங்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்
தலைமைப் பேச்சாளருமான அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமாக
இருக்கும் சோம்நாத் சட்டர்ஜி இன்னமும் பின்பற்றுகிறார். ஜாதி ஏற்றத்
தாழ்வுகளின் சின்னமாக இருக்கும் பூணூல் சடங்கை ஆர்ப்பாட்டமான விழாவாகக்
கொண்டாடி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இவர்கள் எல்லாம் எந்த
அளவுக்கு மார்க்சிஸ்ட்கள் ஆவார்கள்? இவ்வாறு அந்தப் பத்திரிகை
எழுதியிருக்கிறது.

இந்தச் செய்தியை அப்படியே மொழிபெயர்த்து விடுதலை (24.8.1993 முதல்
பக்கத்தில்)

பூணூல் பிராண்ட் மார்க்சியம் பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத் தும்
சோம்நாத் சட்டர்ஜி என்னும் தலைப் பில் அப்பொழுதே வெளியிட்டது.

கொஞ்சம் அசந்தால் மார்ச்சுக்கே பூணூல் போட்டு விடுவார்களோ!

இந்தப் பூணூல் திருமேனிகள்தாம் ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது கூடவே
கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.

குறிப்பு: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்கள் பச்சைக்
கொடி காட்டியிருப்பது வரவேற்கத் தக்கதாகும்.

-------------------19-6-2010 "விடுதலை” ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள்
எழுதிய கட்டுரை

Friday, June 18, 2010

ராகுல் டிராவிட்



இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் ஸ்கொட்லாந்து தேசிய அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளமை பலருக்கு தெரியாமல் இருக்கும். அதிலும் அவர் ஸ்கொட்லாபந்து அணிக்காக பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியுள்ளார் என்றால் நம்புவீர்களாக.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து இங்கிலாந்தின் முதல்தர கிரிக்கெட் தொடரான இங்லீஷ் நஷனல் கப் (45 ஓவர் போட்டி) தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் விளையாடுவதற்காக ராகுல் டிராவிட்டையும் ஸ்கொட்லாந்து தேசிய அணி ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதன்படி 2003 ஆம் ஆண்டு ஸ்கொலாந்து அணிக்காக விளையாடிய டிராவிட் இங்கிலாந்து முதல்தர போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதன்போது அவர் ஸ்கொட்லாந்திற்காக 11 போட்டிகளில் விளையாடி 600 ஓட்டங்களைக் குவித்தார். இதன் ஓட்ட சராசரி 66.66 ஆகும். குறிப்பாக இந்த போட்டித் தொடரில் நொடிங்ஹம்ஷயர் அணியுடனான ஆட்டத்தில் டிராவிட் ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களைப் பெற்றதோடு சமர்செட்டுடனான போட்டிகளில் ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களையும் 114 ஓட்டங்களையும் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணிக்கு ஸ்கொட்லாந்து அணியுடன் ஒருநாள் போட்டி ஒன்று அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆட்டத்தில் ராகுல் டிராவிட்டும் ஸ்கொட்லாந்து அணிக்காக விளையாடினார். எனினும் அவர் போட்டியில் முகம்கொடுத்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டிக்கொண்டது.
எனினும் ஸ்கொட்லாந்துபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சர்வதேச ஆட்டமாக பதியப்படவில்லை. இதனால் டிராவிட் இரண்டு அணிகளுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என சாதனை படைக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

Tuesday, June 8, 2010

இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?'' - (படித்தது)

ஒரு பணக்காரன், வந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம்.

''என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?'' என்று புலம்பினான்.

''அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?'' என்று கேட்டார்.

''ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்.''

''அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வத்திருக்கிறார்கள்?''

''கொஞ்சம் பேர்தான் வத்திருக்கிறார்கள்.''

''சரி, எத்தனை பேர் சொந்தமாய் கார் வத்திருக்கிறார்கள்?''

பணக்காரன் யோசித்தான்.''அதுவும் ரொம்பக் கொஞ்சம் பேர்தான்.''

''ஊரில் உன்னைப்போல; எத்தனை பேரிடம் பணம் இருக்கிறது?''

''என்ன கேள்வி இது ? ஊரிலேயே பெரிய பணக்காரன் நான்தான்!''

''உன் ஊரில் அத்தனை பேர் இருந்தும் நீ ஒருவன்தான் பெரிய பணக்காரனாய் இருக்கிறாய். இவ்வளவு பேர் இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கொடுத்தாய் என்று இறைவனை கேட்டிருக்கிறாயா?''.

இந்தக் கேள்விக்கு பணக்காரனிடம் பதிலில்லை.

போபால் விஷவாயு வழக்கு

1984ம் ஆண்டு திசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு தாக்கி கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்

இந்த வழக்கு கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே வந்து இப்போது ஒரு கேவலமான தீர்ப்பு வந்து உள்ளது. பாமர மக்கள் ஏற்கனவே நீதி துறையின் மீது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து கொண்டு வருகிறார்கள். உதாரணம் , ருச்சிகா தற்கொலை வழக்கு, அப்துல் கலாம் அவர்களுக்கு கைது வாரன்ட்.


தற்போது, அவர்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்த மேலும் ஒரு தீர்ப்பாக போபால் வழக்கு அமைந்து உள்ளது.

இந்த வழக்கில் ஏழு பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை. இந்த தீர்ப்புக்கு பேசாமல் அனைவரையும் விடுதலையே செய்து இருக்கலாம்.

ஏன், என்றால் இந்த தீர்ப்பை குற்றம் சாற்ற பெற்றவர்கள் மேல் முறையீடு செய்யலாமாம். இந்த தீர்ப்பு வருவதற்கே 26 ஆண்டுகள் என்றால், இவர்கள் மேல் முறையீடு செய்து அந்த தீர்ப்பு வருவதற்குள் இவர்கள் அனைவருமே உயிருடன் இருக்க மாட்டார்கள் (இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் உயிருடன் இல்லை).

மேலும், இந்த நிறுவனத்தின் தலைவர் மீது தீர்ப்பில் ஒரு வரி கூட குற்றம் சாட்டப்படவில்லை. 1984ம் ஆண்டே அவர் ஜாமீனில் வெளிவந்து, தனி விமானத்தில் நியூயார்க் சென்றவர், அங்கே சொகுசு தீவில் உல்லாசமாக இருக்கிறார். இங்கே அவர் பெயர் தேடப்படும் குற்றவாளியாக காகிதத்தில் மட்டும் உள்ளது.

பெரியண்ணன் அமெரிக்காவும் அவரை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என தெனாவட்டாக சொல்லி கொண்டு உள்ளது. ஒரு இந்தியன் இதே போல அமெரிக்காவில் ஒரு குற்ற செயல் செய்து விட்டு இந்தியாவில் உல்லாசமாக இருந்தால், அமெரிக்கா சும்மா விட்டு விடுமா. எங்கள் நாட்டுக்கு இந்தியாவால் ஆபத்து என்று சொல்லி நம் மீது அணு ஆயுதங்களை வீசி இருக்கும். ஆனால் நாம் இன்னும் அமெரிக்காவின் காலை நக்கி கொண்டு உள்ளோம்.

கடைசியாக, நம்மை ஆள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார்கள் என்ற ஒரு காரணத்திற்காக, அண்டை நாட்டில் ஒரு இனத்தையே அழிக்க உதவி செய்து, அந்த நாட்டு அதிபருக்கு விருந்து வைத்து உள்ளம் குளிர்ந்தீர்களே. அதை போல தங்கள் கணவரை, மனைவியை, சகோதர, சகோதரியை இழந்தவர்கள் தங்களால் இயன்ற வழியில் பழி வாங்க தொடங்கினால் நாடு நாடாக இருக்காது, சுடுகாடாக மாறி விடும்.

Sunday, June 6, 2010

பொது அறிவு தகவல்கள் 5 - பகுதி 1

  1. கியூபாவின் அதிகாரபூர்வ மொழி ஸ்பானிஷ்.
  2. பெனாரஸ் இந்து பல்கலை கழகத்தை நிறுவியவர் பன்டிட் மதன் மோஹன் மால்‌வியா.
  3. வங்காள ஆசிய சங்கத்தை உருவாக்கியவர் சர் வில்‌லியம் ஜோன்‌ஸ்.
  4. DVD என்றால் டிஜிட்டல் வெர்சடைல் டிஸ்‌க்.
  5. SMS-ன் விரிவாக்கம் ஷார்‌ட் மெசேஜ் சர்‌விஸ்.

Wednesday, June 2, 2010

விஜய் நஷ்டஈடு தர வேண்டுமா?



விஜய் நடித்து கடைசியாக வந்த சில படங்கள் தங்களுக்கு பெருத்த நஷ்டம் கொடுத்து விட்டதாகவும், அதை ரஜினி, மணிரத்தினம் போல விஜய் ஈடுகட்ட வேண்டும் என்றும் திரை அரங்க உரிமையாளர்கள் சரமாரி புகார் கூறி கொண்டு உள்ளனர்.

அய்யா! திரை அரங்க உரிமையாளர்களே உங்கள் வசதிக்கு ஒரு விஷயத்தை சுத்தமாக மறந்தோ அல்லது மறைத்தோ பேசுகிறீர்கள். பாபா படத்தின் தயாரிப்பாளர்களில் ரஜினியும் ஒருவர். இருவர் திரைபடத்தின் தயாரிப்பாளர் மணிரத்தினம். அதனால் இருவரும் நஷ்டஈடு கொடுத்தனர். ஆனால் விஜய் எனக்கு தெரிந்து இதுவரை எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

விஜய்காக தானே நாங்கள் படத்தை சிறப்பு காட்சி கூட பார்க்காமல் வாங்கினோம் என்றால் அதற்கு உங்கள் பேராசை தான் காரணம். சிறப்பு காட்சி பார்த்து தான் வாங்குவோம் என்று கூறி, தம்மால் வாங்க முடியாமல் வேறு திரை அரங்கில் வெளியிட்டு அவர்கள் லாபம் சம்பாதித்து விடுவார்களோ என்ற எண்ணம் தான் காரணம். இதற்கும் விஜய் பொறுப்பேற்க முடியாது.
இதுவரை விஜய் நடித்த பல படங்கள் மூலம் சம்பாதித்த லாபத்தில் ஒரு பங்கை விஜய்க்கு நீங்கள் கொடுத்து இருந்தால், இப்போதைய உங்கள் மிரட்டலை அனைவரும் ஆதரிக்க முடியும். லாபத்தில் நான் பங்கு தர மாட்டேன், ஆனால் நட்டம் வந்தால் நீ பங்கு கொடுக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம். இதற்கு பேர் கட்ட பஞ்சாயத்து! அல்லவா.

இந்திய அணி கோப்பை வெல்லுமா?


முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் தனது முதல் போட்டியில் இந்திய அணி அனுபவமில்லாத ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருப்பார்கள். ஆனால் ஒரு மோசமான மூன்றாம் தர அணி இப்படி தானே தோற்கும். இளம் சுரேஷ் ரைனா- வை நம்மால் குறை கூற முடியாது. பந்து வீச்சாளர்கள் செய்யும் தவறுக்கு அணி தலைவர் என்ன தான் செய்ய முடியும்.

முக்கியமாக அணி தேர்வு சரி இல்லாமல் இருந்தால் அணி தோல்வி அடைய தானே செய்யும். அனுபவமில்லா முரளி விஜயின் தேர்வு மிக பெரிய தவறு. அவருக்கு பதில் ராபின் உத்தப்பா-வை தேர்வு செய்து இருக்க வேண்டும். அவருடன் விராத் கொஹ்லி ஆட்டத்தை தொடங்க பின்பு சுரேஷ் ரைனா களம் இறங்க வேண்டும். யுவராஜ்க்கு மாற்று தமிழக வீரர் பத்ரிநாத் தான். ஆனால் அவர் அணியில் தேர்வு செய்ய படவில்லை. நான்காவதாக பத்ரிநாத் பின்பு ரோஹித் ஷர்மா , தினேஷ் கார்த்திக், யூசுப் பதான், ஜடேஜா களம் இறங்க வேண்டும். வேக பந்து வீச்சாளர்களில் இர்பான் பதானை அணியில் சேர்த்து அவரும், அசோக் திண்டா, வினய்குமார் போன்ற வீரர்கள் இருந்தால் அணி வென்று இருக்கும்.

இந்திய அணியில் மிஸ்ரா, ஒஜா, ஜடேஜா, அஷ்வின் என எதற்கு நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள். இதை போன்ற மொக்கை அணி எப்படி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்க முடியும். இவர்கள் இறுதி போட்டிக்கு சென்றாலே அதிசயம்தான்.

திமுக - பாமக -வின் சந்தர்ப்பவாத அரசியல்



தமிழக அரசியல் உலகில் சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்ட காட்சி நடப்பதை பார்த்து அனைவரும் முகம் சுளிக்கும் அருவருக்க தக்க காட்சிகள் நடக்கிறது. கூட்டணிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் பொத்திகிட்டு இருந்தா அடுத்த ராஜ்யசபாவில் வாய்ப்பு என கருணாநிதி செக் வைக்க, அரண்டு போன ராமதாஸ் தன் கட்சியில் உள்ள தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை தவிர்த்து அனைவரையும் கருணாநிதி காலில் விழ வைத்து கொண்டு இருக்கிறார்.


கருணாநிதி எதை எதிர் பார்த்தாரோ அதை தான் ராமதாஸ் கட்சியை சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற உடன், மைனாரிட்டி (நன்றி: 'செல்வி'.ஜெயலலிதா) திமுக அரசு பதவியில் இருப்பது தங்களால் தான் என்பது போல் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிய ராமதாசை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியில் அனுப்பிய கருணாநிதி, அவர்கள் குணத்திற்கு கண்டிப்பாக ஜெயலலிதாவிடம் உதைபட்டு தன் காலில் வந்து விழுவார்கள் என எதிர்பார்த்தார். அதை போல தற்போது அரசியல் அனாதை ஆக உள்ள ராமதாசும் வேறு வழி இல்லாமல் கருணாநிதியிடம் மண்டியிட்டு அவர் எப்போது பிச்சை போடுவார் என தட்டை பார்த்து கொண்டு இருக்க வேண்டியது தான். நடுவில் முன்பு போல ஆடினால் மீண்டும் கெட்-அவுட் தான்.